டி20 உலகக்கோப்பை 2026: அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம்? பும்ரா குறித்து அதிரடி அப்டேட்!

நமீபியாவுக்கு எதிரான முக்கிய போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியில் கலவையான செய்திகள் வெளியாகியுள்ளன. உலகின் நம்பர் 1 டி20 பேட்டரான அபிஷேக் சர்மா, வயிற்று உபாதை காரணமாக வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. அவர் தற்போது ஓய்வில் இருப்பதாகவும், போட்டிக்கு முன்னதாக குணமடைவார் என நம்புவதாகவும் உதவி பயிற்சியாளர் ரயான் டென் டோசேட் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் களமிறங்கியுள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வலைப்பயிற்சிக்கு திரும்பிய பும்ரா, மிகுந்த வேகத்துடன் பந்து வீசினார். பயிற்சியின் போது கேப்டன் சூர்யகுமார் யாதவையே தனது பந்துவீச்சால் திணறடித்தார். பும்ரா முழு உடல் தகுதியுடன் இருப்பதால், நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அபிஷேக் சர்மாவின் உடல்நிலை மற்றும் பும்ராவின் வருகை குறித்து இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.