தலைநகரில் மரணப்பொறி! திறந்தநிலை மேன்ஹோலில் விழுந்து தொழிலாளி பலி: உங்கள் பகுதி பாதுகாப்பானதா?

தலைநகரில் மரணப்பொறி! திறந்தநிலை மேன்ஹோலில் விழுந்து தொழிலாளி பலி: உங்கள் பகுதி பாதுகாப்பானதா?

டெல்லி ரோகிணி செக்டர் பகுதியில் திறந்த நிலையில் இருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் விழுந்து, பீகாரைச் சேர்ந்த தொழிலாளி வீர்ஜு குமார் ராய் பரிதாபமாக உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை மாலை சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டனர்.

நீண்ட நாட்களாக மூடியின்றி ஆபத்தான நிலையில் இருந்த இந்த மேன்ஹோல் குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கனவே புகார் அளித்தும், டிடிஏ (DDA) நிர்வாகம் அலட்சியமாக இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. காவல்துறையினர் இது தொடர்பாக கவனக்குறைவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *