முகமது யூனுஸின் சொத்து மதிப்பு ஒரு ஆண்டில் ₹1.5 கோடி உயர்வு: முழு விவரம் இதோ!

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ் மற்றும் பிற ஆலோசகர்களின் சொத்து விவரங்கள் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களின் வாழ்க்கைத்துணைகளின் சொத்து விவரங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024-ல் முகமது யூனுஸின் மொத்த சொத்து மதிப்பு 14.01 கோடி டாக்கா (வங்கதேச நாணயம்) ஆக இருந்தது. இது 2025 ஜூன் 30 நிலவரப்படி 15.62 கோடி டாக்காவாக அதிகரித்துள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பு சுமார் 1.61 கோடி டாக்கா உயர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவருக்கு எந்தவிதமான கடன் சுமைகளும் இல்லை.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக, அரசுப் பதவியில் இருப்பவர்கள் தங்கள் சொத்துகளை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என்ற தனது வாக்குறுதியை யூனுஸ் இதன் மூலம் நிறைவேற்றியுள்ளார். எதிர்காலத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விவரங்களை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற திட்டத்தையும் அவர் முன்னெடுத்துள்ளார்.
வங்கதேச வரலாற்றில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.