பிஎம் கேயர்ஸ்: நாடாளுமன்றத்திலும் பதில் சொல்ல மறுக்கும் மத்திய அரசு! ஏன் இந்த ரகசியம்?

பிஎம் கேயர்ஸ்: நாடாளுமன்றத்திலும் பதில் சொல்ல மறுக்கும் மத்திய அரசு! ஏன் இந்த ரகசியம்?

பிஎம் கேயர்ஸ் நிதி (PM CARES Fund) தொடர்பான எந்தவொரு கேள்வியையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிதி முற்றிலும் தன்னார்வப் பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், இதில் அரசு பட்ஜெட் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்றும் மக்களவை செயலகத்திடம் அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனால், இந்த நிதியை நாடாளுமன்றக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டிய சட்டப்பூர்வ கட்டாயம் இல்லை என்று அரசு கூறுகிறது.

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இந்த நிதியில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

கொரோனா காலக்கட்டத்தில் திரட்டப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியின் கணக்குகளை ஏன் மறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இருப்பினும், பிஎம் கேயர்ஸ் ஒரு பொதுநல அறக்கட்டளை என்று கூறி மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது. இந்த விவகாரம் தற்போது தேசிய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *