எரியும் மணிப்பூர்: 5 நாட்களுக்கு இணையம் கட், ஊரடங்கு அமல் – மீண்டும் பதற்றம்!

எரியும் மணிப்பூர்: 5 நாட்களுக்கு இணையம் கட், ஊரடங்கு அமல் – மீண்டும் பதற்றம்!

மணிப்பூரின் உக்ருல் பகுதியில் குகி-ஜோ மற்றும் நாகா பிரிவினரிடையே ஏற்பட்ட திடீர் மோதலால் அந்த மாநிலம் மீண்டும் போர்க்களமாக மாறியுள்ளது. 30-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அடுத்த 5 நாட்களுக்கு இணையச் சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. மேலும், வன்முறை பாதித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 163-வது பிரிவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு தனிப்பட்ட தாக்குதல், தற்போது சமூக மோதலாக வெடித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். போக்குவரத்து முடக்கம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிப்பால் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள மணிப்பூரில், இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்பது தற்போதைய பெரும் கேள்வியாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *