ரூ. 5,500 கோடி பாலியல் ஊழல் சொத்து: யாருக்கு சேரப்போகிறது எப்ஸ்டீனின் ரகசிய உயில்?

ரூ. 5,500 கோடி பாலியல் ஊழல் சொத்து: யாருக்கு சேரப்போகிறது எப்ஸ்டீனின் ரகசிய உயில்?

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையிலேயே தற்கொலை செய்து கொண்ட கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் சுமார் 5,500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இப்போது யாருடைய கைக்குச் செல்லும் என்பது பெரும் விவாதமாக மாறியுள்ளது.

தான் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக எப்ஸ்டீன் எழுதிய ரகசிய உயிலில், தனது காதலி கரினா ஷுலியாக் மற்றும் சில செல்வாக்கு மிக்க நபர்களின் பெயர்களை வாரிசுகளாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது நீதிமன்றக் கண்காணிப்பில் உள்ள இந்தச் சொத்துக்களின் மதிப்பு சட்டப் போராட்டங்களால் 12 கோடி டாலராகக் குறைந்துள்ளது. இந்த ‘பாவத்தின் பணம்’ பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சென்றடையுமா அல்லது சட்டச் சிக்கல்களுக்கு இடையே செல்வாக்கு மிக்கவர்களுக்கே போய்ச் சேருமா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *