பெட்ரோல், டீசல் விலை குறையுமா? வெனிசுலாவுடன் இந்தியா போட்ட மெகா டீல்!

நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், வெனிசுலாவிடமிருந்து சுமார் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனங்களான IOCL மற்றும் HPCL ஒப்பந்தம் செய்துள்ளன.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த எண்ணெய் இருப்பு, வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போரினால் கச்சா எண்ணெய் சந்தை நிலையற்றதாக இருக்கும் சூழலில், இந்த புதிய இறக்குமதி சாதாரண மக்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கக்கூடும்.
வெனிசுலா எண்ணெயை சுத்திகரிப்பது குறித்து சில சந்தேகங்கள் எழுந்தாலும், நவீன சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தரமான எரிபொருள் மக்களுக்கு கிடைக்கும் என நிபுணர்கள் உறுதி அளித்துள்ளனர். இந்த உலகளாவிய அரசியல் நகர்வு, இந்திய வாகன ஓட்டிகளின் பாக்கெட்டிற்கு லாபமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.