சூரிய பெயர்ச்சி: பிப். 13 முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.. குவியப்போகும் செல்வம்!

சென்னை: கிரகங்களின் ராஜாவான சூரியன் வரும் பிப்ரவரி 13-ம் தேதி கும்ப ராசிக்குள் நுழைகிறார். இந்த முக்கிய கிரக மாற்றமானது பொதுமக்களின் வருமானம் மற்றும் சமூக அந்தஸ்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேஷம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நிதி நெருக்கடிகள் நீங்கி, பொருளாதார ரீதியாக வலுப்பெறும் காலம் இது.
ரிஷபம் மற்றும் மிதுன ராசியினருக்குப் பணியிடத்தில் சிறப்பான அங்கீகாரமும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. படைப்பாற்றல் மற்றும் கல்வித்துறையில் இருப்பவர்களின் கௌரவம் சமூகத்தில் உயரும். இந்த காலகட்டத்தில் கூட்டு முயற்சியுடன் செயல்படுவது வெற்றியைத் தேடித்தரும். சரியான முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் சேமிப்பை பன்மடங்கு உயர்த்த இதுவே பொன்னான வாய்ப்பு.