பல்லி வலிக்கு குட்பை! கடுகு எண்ணெயில் ஒளிந்திருக்கும் மாயாஜாலம்: இதோ எளிய டிப்ஸ்!

பல்லி வலிக்கு குட்பை! கடுகு எண்ணெயில் ஒளிந்திருக்கும் மாயாஜாலம்: இதோ எளிய டிப்ஸ்!

பற்களில் ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் துவாரங்களால் (Cavity) இன்று பலரும் அவதிப்படுகிறார்கள். இனிப்பு அல்லது குளிர்ந்த உணவுகளை உண்ணும்போது பற்களில் கூச்சம் ஏற்படுகிறதா? இது ஆரம்பக்கால அறிகுறி என்கின்றனர் மருத்துவர்கள். இதனை கவனிக்காமல் விட்டால், நிலைமை ‘ரூட் கெனால்’ சிகிச்சை வரை கொண்டு செல்லக்கூடும்.

இந்த வலிக்கு உடனடித் தீர்வு காண, ஒரு சிட்டிகை உப்புடன் சிறிது கடுகு எண்ணெயைக் கலந்து, ஈறுகளில் மென்மையாக மசாஜ் செய்யவும். இந்த கலவை பற்களில் உள்ள அழுக்குகளை (Plaque) நீக்கி, ஈறுகளை வலுவாக்க உதவுகிறது.

மேலும், வலி உள்ள இடத்தில் கிராம்பு எண்ணெய் அல்லது வேப்பிலை கொதிக்க வைத்த நீரால் வாய் கொப்பளிப்பதன் மூலம் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும். இருப்பினும், வீட்டு வைத்தியம் தற்காலிக நிவாரணமே தரும் என்பதால், வலி நீடித்தால் பல் மருத்துவரை அணுகுவது அவசியம். தினமும் இருமுறை பல் துலக்குவது உங்களை பெரிய அறுவை சிகிச்சைகளில் இருந்து காப்பாற்றும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *