இந்தியாவுடன் மோத பிசிபி போட்ட 3 மெகா கண்டிஷன்: பாகிஸ்தானின் அடுத்த அதிரடி என்ன?
February 9, 2026

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் நீடித்து வந்த இழுபறி நீங்கி, தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் முடிவை வாபஸ் பெற, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.
பாகிஸ்தானின் அந்த அதிரடி நிபந்தனைகள் இதோ:
- கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஐசிசி-யின் வருமானப் பங்கீட்டில் பாகிஸ்தானுக்கு வழக்கத்தை விட கூடுதல் தொகையை ஒதுக்க வேண்டும்.
- இருதரப்பு தொடர்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை மீண்டும் தொடங்க வேண்டும்.
- பரஸ்பர மரியாதை: 2026 டி20 உலகக் கோப்பையின் போது, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் மைதானத்தில் கை குலுக்கி பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை ஐசிசி ஏற்குமா என்பதைப் பொறுத்தே இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா என்ற இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.