டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் மோத சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான் விதித்த 3 அதிரடி நிபந்தனைகள்

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. லாகூரில் ஐசிசி அதிகாரிகளுடன் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, இந்திய அணியுடன் விளையாட பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த போட்டியில் பங்கேற்க ஐசிசி-யிடம் மூன்று முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான் முன்வைத்துள்ளது.
ஐசிசி வருவாயில் கூடுதல் பங்கு, இந்தியாவுடன் இருதரப்பு தொடர்களை மீண்டும் தொடங்குதல் மற்றும் ஹேண்ட்ஷேக் புரோட்டோகால் ஆகிய கோரிக்கைகளை பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக போட்டியை புறக்கணிக்க முயன்ற பாகிஸ்தான், தற்போது ஐசிசியின் அழுத்தம் காரணமாக இந்த புதிய நிபந்தனைகளுடன் களமிறங்க முன்வந்துள்ளது. இந்த கோரிக்கைகளை ஐசிசி ஏற்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.