மனைவியை ஆயிரத்திற்கு விற்ற கணவன் காட்டுமிராண்டித்தனமான கூட்டுப் பாலியல் வன்கொடுமை

மனைவியை ஆயிரத்திற்கு விற்ற கணவன் காட்டுமிராண்டித்தனமான கூட்டுப் பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுனில் கணவனே தனது மனைவியை வெறும் ஆயிரம் ரூபாய்க்கு விற்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி எரிவாயு ஏஜென்சிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, பப்பு மற்றும் பாலகிஷன் ஆகியோரிடம் தனது மனைவியை அந்த நபர் ஒப்படைத்துள்ளார். அவர்கள் பெண்ணை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

இந்தக் கொடுமை குறித்து கணவனிடம் கேட்டபோது, “உன் மூலம் நான் பணம் சம்பாதிப்பேன்” என்று அவர் திமிராகக் கூறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *