ஆன்லைன் கேமிங் போதையால் பறிபோன உயிர்! 22 வயது இளைஞரின் மூளை நரம்பு வெடித்து நேர்ந்த விபரீதம்
February 9, 2026

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த முகமது கைஃப் என்ற இளைஞர், செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது ரத்த அழுத்தம் அதிகரித்து மூளை நரம்பு வெடித்து உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக தூக்கமின்றி இரவு முழுவதும் கேம் விளையாடியதால் ஏற்பட்ட மன அழுத்தமே இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக ரத்த அழுத்தப் பாதிப்பு இருந்தும், இடைவிடாத கேமிங் விளையாட்டால் நிலைமை மோசமடைந்தது. டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். செல்போன் மற்றும் கேமிங் மோகத்தால் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்தச் சம்பவம் பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.