எப்ஸ்டீன் ஆவணங்களில் 169 முறை தலாய் லாமாவின் பெயர்: பகீர் கிளப்பும் ரகசியங்களும் அலுவலகத்தின் அதிரடி விளக்கமும்!

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான அமெரிக்க நீதிமன்ற ஆவணங்களில், திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் பெயர் 169 முறை இடம்பெற்றுள்ளது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2012-ஆம் ஆண்டு ஒரு தீவு நிகழ்வில் பங்கேற்பது மற்றும் 2015-இல் விருந்துக்கு அழைப்பது போன்ற மின்னஞ்சல் குறிப்புகள் இதில் அடங்கும். ஏற்கனவே டிரம்ப், பில் கேட்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இவ்வழக்கில் சிக்கியுள்ள நிலையில், இந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவல்களை தலாய் லாமாவின் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. புனிதத் தலைவர் தலாய் லாமா, ஜெப்ரி எப்ஸ்டீனை ஒருபோதும் நேரில் சந்தித்ததோ அல்லது அவருடன் எவ்வித தொடர்போ கொண்டதில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எப்ஸ்டீன் தரப்பிலிருந்து கோரப்பட்ட எந்தவொரு சந்திப்பிற்கும் தலாய் லாமா ஒருபோதும் அனுமதி அளித்ததில்லை எனவும் அவரது தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.