தவெக நிர்வாகிகள் அதிரடி கைது: முக்கியப் புள்ளி எஸ்கேப்! வலைவீசி தேடும் தனிப்படை – பின்னணி என்ன?

தவெக நிர்வாகிகள் அதிரடி கைது: முக்கியப் புள்ளி எஸ்கேப்! வலைவீசி தேடும் தனிப்படை – பின்னணி என்ன?

தேனியில் கடந்த 7-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, தவெக நிர்வாகிகள் மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாவட்டப் பொருளாளர் கவுதம் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் முக்கிய நபராகக் கருதப்படும் தவெக மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கைதாவதும், மாவட்டச் செயலாளர் தலைமறைவாக இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *