வடகொரியாவில் ஸ்க்விட் கேம் பார்த்த மாணவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

தென்கொரியாவின் ‘ஸ்க்விட் கேம்’ தொடரைப் பார்த்தது மற்றும் ‘கே-பாப்’ இசை கேட்டதற்காக வடகொரியாவில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டிலிருந்து தப்பி வந்தவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு ஊடகங்களின் உள்ளடக்கங்களைப் பார்ப்பது வடகொரியாவில் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.
இதற்கென 2020-ல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின்படி, தென்கொரியத் திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும், அதனைப் பரப்புபவர்களுக்கு மரண தண்டனையும் வழங்கப்படுகிறது. பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும், மூளைச்சலவை செய்யவும் இத்தகைய தூக்குத் தண்டனைகள் பொது இடங்களில் நிறைவேற்றப்படுவதாகத் தப்பியோடியவர்கள் தெரிவித்துள்ளனர். தண்டனையிலிருந்து தப்பிக்க மக்கள் தங்கள் வீடுகளையே விற்கும் அவலநிலையும் அங்கு நீடிக்கிறது.