நாடாளுமன்றத்தில் இன்றும் கடும் அமளி? இரு முக்கிய விவகாரங்களில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
February 9, 2026

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அஸ்ஸாம் முதல்வர் குறித்த சர்ச்சை வீடியோ விவகாரங்களை முன்வைத்து அரசை முற்றுகையிட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இது தொடர்பாக வியூகம் அமைக்க மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று காலை ஆலோசனை நடத்துகின்றனர்.
அமெரிக்க ஒப்பந்தத்தில் இந்திய நலன்கள் புறக்கணிக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அஸ்ஸாம் பாஜக பகிர்ந்த சர்ச்சை வீடியோ விவகாரமும் அவையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கவுள்ள சூழலில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.