தங்கம் விலையில் அதிரடி மாற்றம்! ஒரே நாளில் ரூ.28,900 உயர்வு – அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
February 7, 2026

கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை, இன்று சனிக்கிழமை திடீரென உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. 24 கேரட் தங்கம் 10 கிராமிற்கு ரூ.2,890 உயர்ந்துள்ள நிலையில், 100 கிராம் தங்கம் ஒரே நாளில் ரூ.28,900 வரை அதிகரித்துள்ளது. உலகளாவிய சந்தை மாற்றங்களால் சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,731-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.10,000 அதிகரித்து ரூ.2,85,000-ஐ எட்டியுள்ளது. வார இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி விலை உயர்வு நகைப்பிரியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.