ஒபாமா தம்பதியை ‘குரங்கு’ என அவமதித்த ட்ரம்ப்! இனவெறி வீடியோவால் பற்றி எரியும் அமெரிக்கா
February 7, 2026

முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெலை குரங்குகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய வீடியோவை டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 2020 தேர்தல் முறைகேடுகள் குறித்த இந்த 62 வினாடி வீடியோ, கடும் இனவெறி போக்கைக் கொண்டிருப்பதாகக் கூறி உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் வெடித்ததையடுத்து, வெள்ளை மாளிகை அந்த வீடியோவை நீக்கிவிட்டு ஊழியரின் தவறு என விளக்கம் அளித்துள்ளது. ஆனால், “நான் எந்த தவறும் செய்யவில்லை, மன்னிப்பு கேட்க முடியாது” என ட்ரம்ப் பிடிவாதமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.