பஞ்சதந்திரம் டூ ஹனுமான்: இந்திய கதைகளில் கேம்களை உருவாக்குங்கள்! மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்

பஞ்சதந்திரம் டூ ஹனுமான்: இந்திய கதைகளில் கேம்களை உருவாக்குங்கள்! மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்

‘பரீக்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் மாணவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, கேமிங்கை வெறும் பொழுதுபோக்காக பார்க்காமல் ஒரு சிறந்த தொழில்வாய்ப்பாக மாற்ற அறிவுறுத்தினார். இந்திய கலாச்சாரம், பஞ்சதந்திர கதைகள் மற்றும் வீரர் அபிமன்யு போன்ற புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உயர்தர கேம்களை உருவாக்க அவர் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதேசமயம், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் குறித்து பிரதமர் எச்சரித்தார். தரவு (Data) மலிவாக கிடைப்பதால் நேரத்தை வீணடிக்காமல், கேமிங்கில் ஒழுக்கத்தையும் சமநிலையையும் கடைபிடிக்க வேண்டும் என்றார். சுய முன்னேற்றத்திற்கு கேமிங்கை ஒரு கருவியாகப் பயன்படுத்த அவர் மாணவர்களை ஊக்குவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *