அதிர்ச்சி! இளம்பெண்ணை சிறைபிடித்து சித்திரவதை செய்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர் ‘நன்சென்’ ஷமீக் கைது

அதிர்ச்சி! இளம்பெண்ணை சிறைபிடித்து சித்திரவதை செய்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர் ‘நன்சென்’ ஷமீக் கைது

கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்ஸர் ஷமீக் அதிகாரி, இளம்பெண் ஒருவரை தனது வீட்டில் சட்டவிரோதமாக சிறைபிடித்து, பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பெஹாலா போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், ஷமீக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், இந்த வழக்கில் முறையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *