விடைபெறும் போட்டியில் வைபவ் ருத்ரதாண்டவம்! உலகக் கோப்பை பைனலில் 175 ரன்கள் குவித்து 10 உலக சாதனைகளைத் தகர்த்தார்
February 6, 2026

14 வயதான வைபவ் சூர்யவன்ஷி தனது கடைசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 175 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தார். 80 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் மிரட்டிய அவர், வெறும் 55 பந்துகளில் அதிவேக சதத்தை விளாசினார். பிசிசிஐ கொள்கைப்படி இதுவே அவரது கடைசி இளையோர் உலகக் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இன்னிங்ஸ் மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள், இளைய வயதில் சதம் மற்றும் இந்திய வீரர்களில் அதிக ரன்கள் என மொத்தம் 10 சாதனைகளை வைபவ் முறியடித்துள்ளார். இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இவரது அதிரடி ஆட்டம் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.