பாகிஸ்தான் தங்கம் மற்றும் செம்பு சுரங்கத்தில் ட்ரம்ப்பின் பார்வை! ரூ. 12,000 கோடி முதலீடு

பாகிஸ்தான் தங்கம் மற்றும் செம்பு சுரங்கத்தில் ட்ரம்ப்பின் பார்வை! ரூ. 12,000 கோடி முதலீடு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ‘ரெகோ டிக்’ தங்கம் மற்றும் செம்பு சுரங்கத்தில் முதலீடு செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்காக சுமார் 130 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட உள்ளது. ‘புராஜெக்ட் வால்ட்’ என்ற புதிய திட்டத்தின் மூலம் உலகில் அரிதான தாதுக்களின் விநியோகத்தை உறுதி செய்ய அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆப்கான் எல்லைக்கு அருகிலுள்ள இந்த சுரங்கப் பகுதியில் பலூச் கிளர்ச்சியாளர்களின் எதிர்ப்பு நிலவி வருகிறது. லாபத்திற்காக பலூசிஸ்தானின் இயற்கை வளங்களை இஸ்லாமாபாத் பிற நாடுகளுக்கு விற்பனை செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய பதற்றமான சூழலில், அமெரிக்காவின் இந்த மிகப்பெரிய வணிக ரீதியிலான முதலீடு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *