வாரம் முழுவதும் பிரிட்ஜில் வைத்த இறைச்சியை உண்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்

செய்தி பிரிவு : வேலைப்பளு காரணமாக வார இறுதி நாட்களில் அதிக அளவு இறைச்சி வாங்கி பிரிட்ஜில் சேமித்து வைக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் இது சத்துக்களுக்கு பதிலாக விஷத்தையே உங்கள் உடலுக்குத் தருகிறது. இறைச்சியைக் கழுவி, ஈரப்பதம் இல்லாமல் காற்று புகாத டப்பாவில் அடைத்து டீப் பிரிட்ஜில் வைப்பதே சரியானது. அடிக்கடி வெளியே எடுத்து வைப்பது பாக்டீரியாக்கள் வளர வழிவகுத்து ஆரோக்கியத்தைச் சீரழிக்கும்.
பிரிட்ஜில் வைக்கப்படும் இறைச்சியை 48 மணி நேரத்திற்குள் சமைத்துவிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதன் நிறம் மாறுதல், துர்நாற்றம் வீசுதல் அல்லது அதன் மென்மைத் தன்மை குறைதல் போன்றவை இறைச்சி கெட்டுப்போனதற்கான அறிகுறிகளாகும். இத்தகைய இறைச்சியை உண்பது உடலில் பல நோய்களை உருவாக்கும். எனவே, மக்கள் ஆரோக்கியமாக வாழ எப்போதும் புதிய இறைச்சியையே பயன்படுத்த வேண்டும் அல்லது சரியான முறையில் குறைந்த காலம் சேமிக்க வேண்டும்.