இலவச மதுவுடன் சிறந்த வேலைவாய்ப்பு ஆலோசனைகள், அசத்தல் ஆஃபர் வழங்கும் பிரத்யேக பார்

இலவச மதுவுடன் சிறந்த வேலைவாய்ப்பு ஆலோசனைகள், அசத்தல் ஆஃபர் வழங்கும் பிரத்யேக பார்

செய்தி பிரிவு : மது அருந்திக்கொண்டே உங்கள் கரியர் பற்றிய கவலைகளுக்கு தீர்வு கிடைத்தால் எப்படியிருக்கும்? ஜப்பானைச் சேர்ந்த ஷோதா உமேமோட்டோ என்பவர், இலவச மதுவுடன் வேலைவாய்ப்பு ஆலோசனைகளை வழங்கும் புதிய பாரைத் தொடங்கியுள்ளார். அன்றாட வேலைப்பளு மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய குழப்பத்தில் இருக்கும் சாதாரண மக்களுக்கு, மன அழுத்தமின்றி சரியான முடிவுகளை எடுக்க இந்த முயற்சி பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இங்கு வருபவர்கள் நிபுணர்களுடன் ஒரு மணி நேரம் வரை தனிமையில் ஆலோசனைகளை மேற்கொள்ளலாம். ஆனால், அங்கு பேசப்படும் விஷயங்களை ரகசியமாக வைக்க வேண்டும் என்ற கடுமையான சட்ட விதி உள்ளது; அதை மீறினால் தண்டனை நிச்சயம். முறையான கரியர் கவுன்சிலிங் செல்ல தயங்குபவர்களுக்கு, இந்த மகிழ்ச்சியான சூழலில் வழங்கப்படும் ஆலோசனைகள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *