பிரிட்ஜில் வைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுகிறீர்களா, இந்த 5 உணவுகள் உங்கள் உயிருக்கே ஆபத்து

செய்தி பிரிவு : இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நேரத்தை மிச்சப்படுத்த பிரிட்ஜில் வைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால், இந்த பழக்கம் உங்கள் உடலில் மெல்ல மெல்ல விஷமாக மாறி வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? மருத்துவர்களின் கூற்றுப்படி, பிரிட்ஜில் 48 மணி நேரத்திற்கு மேல் வைக்கப்படும் உணவு அதன் சத்துக்களை இழப்பதோடு மட்டுமல்லாமல், கிருமிகளின் கூடாரமாகவும் மாறுகிறது. இது உங்கள் செரிமான மண்டலத்தை பாதித்து தீராத வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக சாதம், கோழி இறைச்சி, முட்டை மற்றும் கீரை வகைகளை மீண்டும் சூடுபடுத்துவது மிகவும் அபாயகரமானது. உதாரணமாக, கீரையை மீண்டும் சூடுபடுத்தும்போது அது புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக மாறக்கூடும். ஆரோக்கியமாக வாழ விரும்பினால், உணவை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். எப்போதும் காற்றோட்டமில்லாத டப்பாக்களில் உணவை சேமிப்பதோடு, மூன்று நாட்களுக்கு மேல் பழைய உணவை உட்கொள்வதை தவிர்ப்பதே உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.