பிப்ரவரி 7 அன்று ஓலா மற்றும் ஊபர் ஸ்டிரைக், பொதுமக்களின் பயணம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம்

செய்தி பிரிவு : பிப்ரவரி 7 சனிக்கிழமை அன்று நீங்கள் வெளியில் செல்ல திட்டமிட்டிருந்தால் சற்று கவனமாக இருங்கள். அன்றைய தினம் ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ ஓட்டுநர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் ஆப் மூலம் புக் செய்யப்படும் கார் மற்றும் பைக் சேவைகள் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் பொதுமக்களின் அன்றாட பயணத்தை நேரடியாக பாதிப்பதோடு, அவசர தேவைகளுக்கும் வாகனங்கள் கிடைக்காமல் போகும் சூழலை உருவாக்கும்.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் குறைவான கமிஷன் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முறையான குறைந்தபட்ச வாடகையை நிர்ணயிக்க வேண்டும் மற்றும் வணிக உரிமம் இல்லாத வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கை. சென்னை, மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அன்றைய தின பயணத்திற்கு மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.