8 கணவர்களுக்கு எச்ஐவி பரிசை வழங்கிய கொள்ளைக்காரி, அடுத்த பலி நீங்களாக கூட இருக்கலாம்

8 கணவர்களுக்கு எச்ஐவி பரிசை வழங்கிய கொள்ளைக்காரி, அடுத்த பலி நீங்களாக கூட இருக்கலாம்

செய்தி பிரிவு : திருமண ஆசையில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறிப்பது ஒருபுறம் இருக்க, இப்போது உயிரையே பறிக்கும் அளவிற்கு ஒரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. அடுத்தடுத்து எட்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய ஒரு பெண், தற்போது எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணை திருமணம் செய்த எட்டு ஆண்களும் இப்போது மரண பயத்தில் உறைந்து போயுள்ளனர், இது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டியாலாவைச் சேர்ந்த இந்தப் பெண், தனது கணவரையே அண்ணன் என்று கூறி ஏமாற்றி பல திருமணங்களைச் செய்துள்ளார். திருமணமான சில நாட்களிலேயே நகை மற்றும் பணத்துடன் ஓடிவிடுவது இவர்களது வழக்கம். ஒன்பதாவது திருமணத்திற்குத் தயாரான போது போலீசாரிடம் சிக்கிய அந்தப் பெண்ணுக்கு எச்ஐவி இருப்பது உறுதியானது. முன்பின் தெரியாதவர்களைத் திருமணம் செய்யும் போது முறையான விசாரணை நடத்தவில்லை என்றால், அது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *