டி20 உலகக்கோப்பையில் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடும் 40 இந்திய வம்சாவளி வீரர்கள்

செய்திப் பிரிவு : வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் 15 வீரர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு அணிகளுக்காக களம் காணும் 40 இந்திய வம்சாவளி வீரர்களின் ஆட்டமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரியகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற நட்சத்திரங்களுடன், பல்வேறு நாடுகளின் சீருடையில் இந்த வீரர்கள் விளையாட உள்ளனர். இது சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய திறமைகளின் ஆதிக்கத்தை உலகிற்கு பறைசாற்றுகிறது.
கனடா அணியில் அதிகபட்சமாக 11 இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்கா, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இந்திய வம்சாவளி வீரர்களை பெருமளவில் நம்பியுள்ளன. நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற முன்னணி அணிகளிலும் இந்திய பின்னணி கொண்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்களின் பங்களிப்பு உலகக்கோப்பை தொடரில் விறுவிறுப்பை கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.