காலை எழுந்தவுடன் கண்கள் வீங்கியிருக்கிறதா? உடலில் மறைந்திருக்கும் ஆபத்தான நோயின் அறிகுறியாக இது இருக்கலாம்!

செய்திப் பிரிவு : காலையில் தூங்கி எழுந்ததும் உங்கள் கண்கள் வீக்கமாகவும், இமைகள் கனமாகவும் தெரிகிறதா? தூக்கமின்மை அல்லது அலைபேசி பயன்பாடு என்று நினைத்து இதை அசட்டையாக விடாதீர்கள். ஏனெனில், கண்களின் கீழே தோன்றும் இந்த வீக்கம் உங்கள் உடலில் தைராய்டு பிரச்சனை இருப்பதற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நம் கழுத்துப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் இத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகின்றன.
தைராய்டு என்பது நம் உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான ஒரு சுரப்பியாகும். இதன் சமநிலையின்மை ஏற்படும்போது, அது கண்களைச் சுற்றியுள்ள திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி வீக்கத்தை உண்டாக்குகிறது. பொதுமக்கள் இதனை வெறும் ஒவ்வாமை (Allergy) என்று தவறாகக் கருதுவதால், நோய் முற்றிய பின்னரே சிகிச்சைக்குச் செல்கின்றனர். எனவே, கண்களில் தொடர்ந்து வீக்கம் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.