தினமும் ஒரு கிளாஸ் மது அருந்துவது உங்கள் உயிருக்கு ஆபத்தா? புற்றுநோயைத் தவிர்க்க எதை கவனிக்க வேண்டும்?

பார்வை செய்தி பிரிவு : ஒரு கிளாஸ் மது குடித்தால் ஒன்றும் ஆகாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த தவறான பழக்கம் மெல்ல மெல்ல உங்களை வாய் புற்றுநோய்க்கு தள்ளக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மதுவில் உள்ள நச்சு இரசாயனங்கள் வாயின் மென்மையான திசுக்களைச் சிதைத்து, காலப்போக்கில் உயிர்க்கொல்லி நோயாக மாறுகிறது. புகைபிடிக்காதவர்களுக்கு கூட மதுவினால் மட்டுமே வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
வாயில் ஆறாத புண்கள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத் தழும்புகள் மற்றும் உணவு விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள். ஆரம்பத்திலேயே இவற்றை கண்டறிந்து மதுப்பழக்கத்தை கைவிடுவதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம். உங்கள் அன்றாட ஆரோக்கியத்தில் காட்டும் சிறு அக்கறை மட்டுமே புற்றுநோய் போன்ற பெரிய ஆபத்துக்களில் இருந்து உங்களை காப்பாற்றும்.