பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா ஆப்கானிஸ்தானுடன் பலப்பரீட்சை
February 2, 2026

நடப்பு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது. குரூப்-2 பிரிவில் இருந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப்-1 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
முதல் அரையிறுதிப் போட்டியில் பிப்ரவரி 3-ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்திய அணி தனது அரையிறுதிப் போட்டியில் பிப்ரவரி 4-ஆம் தேதி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.