உலகக்கோப்பைக்கு பதில் பிசிபி நடத்தும் அதிரடி அதம்ய பங்களாதேஷ் டி20 கோப்பை

உலகக்கோப்பைக்கு பதில் பிசிபி நடத்தும் அதிரடி அதம்ய பங்களாதேஷ் டி20 கோப்பை

டி20 உலகக்கோப்பையில் பங்கேற்காத சூழலில், வீரர்களை உற்சாகமாக வைத்திருக்க பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ‘அதம்ய பங்களாதேஷ் டி20 கோப்பை 2026’ தொடரை அறிவித்துள்ளது. இப்போட்டிகள் பிப்ரவரி 5 முதல் 9 வரை மிர்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளன. சுமார் 2.5 கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இத்தொடரில், ஐபிஎல் பாணியிலான ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொடரில் தூம்கேது லெவன், துர்பார் லெவன் மற்றும் துரந்தோ லெவன் ஆகிய மூன்று அணிகள் மோதுகின்றன. லிட்டன் தாஸ் தூம்கேது அணிக்கும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ துர்பார் அணிக்கும், அக்பர் அலி துரந்தோ அணிக்கும் தலைமை தாங்குகின்றனர். பிப்ரவரி 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் லீக் போட்டிகள் முடிந்தபின், பிப்ரவரி 9 அன்று இறுதிப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக கலை நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *