இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்

செய்தி பிரிவு : உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் முக்கிய பணியை ஹீமோகுளோபின் செய்கிறது. மருத்துவர் எல்.எச். கோடேகர் கூற்றுப்படி, இதன் குறைபாடு இதய நோய்கள், தீராத சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். குறிப்பாக பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த குறைபாடு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் உடல் வளர்ச்சி மற்றும் அன்றாட செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்ப்பதுடன், அவ்வப்போது இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கர்ப்பகாலம் மற்றும் மாதவிடாய் சமயங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின்படி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது, போதிய உறக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை இரத்த சோகை பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சிறந்த வழிமுறைகளாகும்.