வேலை பளுவால் பறிபோன உயிர் மற்றும் ஊழியர் இறந்த 8 மணி நேரத்திற்கு பின் அலுவலகம் அனுப்பிய புதிய வேலை

வேலை பளுவால் பறிபோன உயிர் மற்றும் ஊழியர் இறந்த 8 மணி நேரத்திற்கு பின் அலுவலகம் அனுப்பிய புதிய வேலை

அதிகப்படியான வேலை அழுத்தம் காரணமாக 32 வயது சீன புரோகிராமர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றதில் இருந்து, அவர் தினமும் இரவு 9:30 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வந்துள்ளார். உயிரிழந்த அன்று உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அவர் அலுவலகப் பணிகளைச் செய்துகொண்டிருந்ததாக அவரது மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மனிதநேயமற்ற செயலாக, அந்த ஊழியர் இறந்த எட்டே மணிநேரத்தில் அலுவலகத்தில் இருந்து ஒரு புதிய வேலை தொடர்பாக அவருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தருணத்திலும் கூட, அலுவலக சாட் குரூப்களில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த கொடூரமான பணிச் சூழல் மற்றும் நிறுவனத்தின் அலட்சியம் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *