டெல்லி செல்கிறார் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்துடன் முக்கிய சந்திப்பு
February 1, 2026

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். திங்கள்கிழமை மாலை தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை அவர் நேரில் சந்திக்கவுள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் (SIR) உள்ள குளறுபடிகள் குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திற்கு 6 கடிதங்களை எழுதியுள்ளார். வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதாகவும், பொது மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். திங்கள்கிழமை நடைபெறும் இந்த சந்திப்பின் போது, தனது எதிர்ப்பை அவர் நேரடியாக பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.