புகையிலை பொருட்கள் மீது வரி உயர்வு இன்று முதல் சிகரெட் மற்றும் குட்கா விலை அதிரடி அதிகரிப்பு

புகையிலை பொருட்கள் மீது வரி உயர்வு இன்று முதல் சிகரெட் மற்றும் குட்கா விலை அதிரடி அதிகரிப்பு

பிப்ரவரி 1 முதல் பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. பான் மசாலா உற்பத்தியாளர்கள் புதிய பதிவு செய்வதுடன், பேக்கேஜிங் இயந்திரங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது இனி கட்டாயமாகும். உற்பத்தியில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த அனைத்து தகவல்களையும் முறையாக அரசுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிகரெட்டின் நீளத்திற்கு ஏற்ப ஒவ்வொரு குச்சியின் மீதும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. புகையிலை, குட்கா மற்றும் ஜர்தா மீதான கூடுதல் வரி விதிப்பால் இவற்றின் சந்தை விலை கணிசமாக உயரும். இந்த அதிரடி வரி உயர்வு காரணமாக நுகர்வோர் மத்தியில் புகையிலை பயன்பாடு குறைவதோடு, சந்தையில் அவற்றின் விற்பனை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *