வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் இனி தனியார் வசம் புதிய சட்டத்தில் டெல்சி ரோட்ரிக்ஸ் கையெழுத்து

வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில் நீண்டகாலமாக இருந்து வந்த அரசு கட்டுப்பாடு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அந்நாட்டின் செயல் அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், எண்ணெய் துறை சீர்திருத்த சட்டத்தில் வியாழக்கிழமை கையெழுத்திட்டார். இதன் மூலம் எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றில் தனியார் நிறுவனங்கள் முழு அதிகாரத்தைப் பெறுகின்றன. நாட்டின் எதிர்கால நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நிகோலஸ் மதுரோ அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சட்ட மாற்றத்திற்கு முன்னதாக ரோட்ரிக்ஸ் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் ஆலோசனை நடத்தினார். போதைப்பொருள் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி அமெரிக்கா தலையிட்டாலும், அதன் உண்மையான நோக்கம் வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதே என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.