தேர்தல் நெருங்கும் வேளையில் ரயில் பயணக் கட்டணத்தில் முதியோர்களுக்கான சலுகை மீண்டும் கிடைக்குமா

தேர்தல் நெருங்கும் வேளையில் ரயில் பயணக் கட்டணத்தில் முதியோர்களுக்கான சலுகை மீண்டும் கிடைக்குமா

நடைபெறவிருக்கும் மத்திய பட்ஜெட்டில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, ரயில்வே அமைச்சகம் இதற்கான பரிந்துரையை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. இந்தச் சலுகையை மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்ட இந்தச் சலுகை மீண்டும் கிடைத்தால், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான முதியோர்கள் பயனடைவார்கள். தேர்தல் அரசியலில் பொதுமக்களின் ஆதரவைப் பெற இந்தத் திட்டம் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *