இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சமையலறையில் உள்ள இந்த ஒரு பொருள் போதும்

இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சமையலறையில் உள்ள இந்த ஒரு பொருள் போதும்

செய்தி பிரிவு : சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் தற்போது பலரையும் பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. இது இதயம் மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் மன அழுத்தமே இதற்கு முக்கிய காரணங்களாகும். ஏலக்காய் இந்த இரண்டு பிரச்சனைகளையும் கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைப்பதுடன், உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

ஏலக்காய் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அடிவயிற்றுத் தசைகளில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புற்றுநோய் செல்களைத் தடுக்கும் என்சைம்களை இது உடலில் உருவாக்குகிறது. மேலும், உடல் எடையைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தவும் ஏலக்காய் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *