மருமகனை மணந்த மாமி, கணவனுக்கு திருமண புகைப்படத்தை அனுப்பி அதிரடி

மருமகனை மணந்த மாமி, கணவனுக்கு திருமண புகைப்படத்தை அனுப்பி அதிரடி

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் தனது தூரத்து உறவுமுறை மருமகனுடன் இல்லத்தரசி ஒருவர் ஓட்டம் பிடித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூனம் குமாரி என்ற அந்தப் பெண், தனது கணவர் சிவம் குமார் மற்றும் இரண்டு குழந்தைகளைத் தவிக்கவிட்டு திடீரென மாயமானார். தேடுதல் வேட்டை நடந்த நிலையில், தனது மருமகன் அங்கித் குமாருடன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை கணவரின் மொபைலுக்கு பூனம் அனுப்பி அதிர்ச்சியூட்டினார்.

இந்தச் செயலால் நிலைகுலைந்த சிவம் குமார், உடனடியாக அமர்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குழந்தைகளின் பாதுகாப்புக் குறித்து கவலை தெரிவித்த அவர், அவர்களை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மாயமான பெண் மற்றும் குழந்தைகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *