கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி விவசாயியிடமிருந்து 25 லட்சம் ரூபாய் கொள்ளை

மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்டத்தில் பட்டப்பகலில் ஒரு விவசாயிடம் 25 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. லக்விந்தர் என்ற விவசாயி தனது இருசக்கர வாகனத்தில் பணத்துடன் சென்றபோது, மூன்று மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். அவர்கள் லக்விந்தரின் கண்ணில் மிளகாய்ப்பொடியைத் தூவி, அவர் நிலைகுலைந்த நேரத்தில் பணப் பைகளுடன் தப்பி ஓடினர். பாதிக்கப்பட்ட விவசாயி தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட காவல்துறையினர் அங்கிருந்து மிளகாய்ப்பொடி கலந்த நீரைக் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதே மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு வணிகரிடம் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பாணியில் இச்சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.