சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஃபார்முக்கு வர ரிக்கி பாண்டிங் கொடுத்த அதிரடி யோசனை

சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஃபார்முக்கு வர ரிக்கி பாண்டிங் கொடுத்த அதிரடி யோசனை

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக ரன் குவிக்க திணறி வருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் வேளையில், 2025ல் ஒரு அரைசதம் கூட அடிக்காத அவரது ஃபார்ம் குறித்து ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கவலை தெரிவித்துள்ளார். சூர்யகுமார் போன்ற ஒரு சிறந்த வீரர் இவ்வளவு தடுமாறுவது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாக பாண்டிங் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யகுமார் தனது பழைய அதிரடி ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்றால், அவுட் ஆகிவிடுவோம் என்ற பயமின்றி விளையாட வேண்டும் என்று பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார். டிராவிஸ் ஹெட் பாணியில் தன்னை நம்பி களமிறங்கினால் மீண்டும் ரன் மழை பொழியலாம் என அவர் கூறினார். கேப்டன் பதவிக்கு முன்னதாக இருந்த அதே தன்னம்பிக்கையுடன் விளையாடி, தான் உலகின் சிறந்த டி20 வீரர் என்பதை மீண்டும் நிரூபிக்குமாறு சூர்யகுமாருக்கு அவர் ஊக்கம் அளித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *