எதிரி நாடுகளை நடுங்க வைக்கும் உலகின் மிக சக்திவாய்ந்த 5 போர் டாங்கிகள்

உலகெங்கிலும் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் ராணுவ பலத்தை நவீன ஆயுதங்கள் மூலம் அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் அமெரிக்காவின் எம்1ஏ2 ஆப்ராம்ஸ் டாங்கிகள் ஏவுகணைகளை முறியடிப்பதில் முதன்மையாக உள்ளன. ஜெர்மனியின் லியோபர்ட் 2ஏ7 அதன் அசுர வேகம் மற்றும் துல்லியமான தாக்குதலுக்கு பெயர் பெற்றது. ஆசியாவின் மிகவும் முன்னேறிய மற்றும் விலையுயர்ந்த டாங்கியாக தென்கொரியாவின் கே-2 பிளாக் பாந்தர் கருதப்படுகிறது.
இஸ்ரேலின் மெர்காவா மார்க் IV டாங்கிகள் வீரர்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குவதில் உலகப்புகழ் பெற்றவை. அதேபோல் ரஷ்யாவின் டி-14 அர்மடா டாங்கிகள் மனிதர்கள் இல்லாமலே இயங்கும் திறன் கொண்டவை. மணிக்கு 90 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த டாங்கிகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. மலைகள் மற்றும் பாலைவனங்கள் என எந்தவொரு நிலப்பரப்பிலும் எதிரிகளை நிர்மூலமாக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஐந்து டாங்கிகளும் நவீன போர்க்களத்தின் அரசனாக திகழ்கின்றன.