மகள் திருமணத்தின் நிஜமான காட்சியை படத்தில் பயன்படுத்திய ராஜ் கபூர்

மகள் திருமணத்தின் நிஜமான காட்சியை படத்தில் பயன்படுத்திய ராஜ் கபூர்

பாலிவுட்டின் ‘ஷோமேன்’ ராஜ் கபூர் தனது மூத்த மகள் ரிது நந்தாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தினார். ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல் மற்றும் சினிமா துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் வந்து செல்ல வசதியாக தனது வீட்டின் முன்னால் இருந்த சேதமடைந்த சாலையை அவரே சீரமைத்தார். இந்தத் திருமண நிகழ்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது.

ராஜ் கபூர் தனது இயக்கத்தில் உருவான ‘பிரேம் ரோக்’ திரைப்படத்தில் தனது மகளின் திருமணத்தின் நிஜமான காட்சியைப் பயன்படுத்தினார். குறிப்பாக திருமணத்தின் போது வானில் அரங்கேறிய பிரமாண்ட வாணவேடிக்கை காட்சியை அப்படியே அந்தப் படத்தில் சேர்த்தார். ரிஷி கபூர் நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், ராஜ் கபூரின் திரை நுணுக்கத்திற்கு சான்றாக அமைந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *