சவூதி அரேபியா குண்டுவீச்சால் பிளவுபட்ட அரபு கூட்டணி ஏமனில் இருந்து படைகளை விலக்குகிறது யூஏஇ

ஏமனின் முக்கல்லா துறைமுகத்தில் சவூதி அரேபியா நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதல், வளைகுடா நாடுகளுக்கு இடையிலான பல தசாப்த கால மூலோபாய கூட்டணியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. சவூதியின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏமனிலிருந்து தனது மீதமுள்ள அனைத்து படைகளையும் உடனடியாக திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அறிவித்துள்ளது. ஆயுதங்களை ஏற்றிச் சென்றதாகக் கூறி அமீரகக் கப்பல் மீது சவூதி தாக்குதல் நடத்தியதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகும்.
இந்த மோதல் ஏமன் போரின் போக்கை மாற்றுவது மட்டுமல்லாமல், இந்தியா போன்ற நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் வேலைவாய்ப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக, இரு நாடுகளுக்கிடையிலான இந்த விரிசல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஏமனின் அரசியல் எதிர்காலத்தை அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அமீரகம், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளுக்காக மட்டுமே இனி கவனம் செலுத்தப்போவதாகக் கூறியுள்ளது.