இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க 4666 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்கள்

இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க 4666 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்கள்

இந்திய ராணுவம் மற்றும் கடற்படையின் போர் திறனை மேம்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் 4,666 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2,770 கோடி ரூபாய் செலவில் 4.25 லட்சத்திற்கும் அதிகமான நவீன சி.க்யூ.பி (CQB) கார்பைன் துப்பாக்கிகள் வாங்கப்படவுள்ளன. இலகுரக மற்றும் வேகமான தாக்குதல் திறன் கொண்ட இந்த ஆயுதங்கள், எல்லைப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் வீரர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

கடற்படையின் கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்களுக்காக 1,896 கோடி ரூபாய் மதிப்பிலான 48 அதிநவீன ஹெவிவெயிட் டார்பிடோக்கள் வாங்கப்படவுள்ளன. இவை 2028 முதல் 2030 ஆம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்களின் மூலம் நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பாதுகாப்பு ஒப்பந்தங்களின் மதிப்பு 1.82 லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது. இது நாட்டின் தற்சார்பு பாதுகாப்பு உற்பத்திக்கு வலுசேர்க்கும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *