பசுமை எரிசக்தி உற்பத்தியில் இந்தியா படைத்த புதிய வரலாற்று சாதனை

பசுமை எரிசக்தி உற்பத்தியில் இந்தியா படைத்த புதிய வரலாற்று சாதனை

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை 2025 ஆம் ஆண்டில் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. ஆண்டின் முதல் 11 மாதங்களில் 44.5 ஜிகாவாட் பசுமை எரிசக்தி உற்பத்தி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 254 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதில் சூரிய மின்சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது, இந்த ஆண்டு மட்டும் 35 ஜிகாவாட் சூரிய மின்சக்தி கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான பங்களிப்பில் 36 ஜிகாவாட் உற்பத்தியுடன் ராஜஸ்தான் முதலிடத்திலும், 25 ஜிகாவாட்டுடன் குஜராத் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. காற்றாலை மின்சக்தி துறையும் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தற்போது குறைந்த விலையில் மின்சாரம் கிடைப்பதுடன், சுமார் 135 ஜிகாவாட் கூடுதல் திறன் கொண்ட திட்டங்கள் கட்டுமானப் பணிகளில் உள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *