அடுத்தடுத்து அதிரடி காட்டிய இஷான் கிஷன் தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா

அடுத்தடுத்து அதிரடி காட்டிய இஷான் கிஷன் தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஜார்கண்ட் அணியை சாம்பியனாக்கிய இஷான் கிஷன், விஜய் ஹசாரே தொடரின் முதல் போட்டியிலேயே வெறும் 39 பந்துகளில் 125 ரன்கள் குவித்து மிரட்டினார். பிசிசிஐ அறிவுறுத்தலின்படி அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுத்துக்கொண்ட அவர், தற்போது தனது சொந்த ஊரான பாட்னாவிற்கு சென்றுள்ளார். அங்கு தனது கிரிக்கெட் அகாடமியில் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில், இஷான் கிஷன் சிறுவர்களுடன் வார்ம்-அப் செய்தும் அவர்களுக்கு கிரிக்கெட் நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்தும் உற்சாகப்படுத்துகிறார். டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ள இவர், சமீபத்திய அதிரடி ஆட்டத்தின் காரணமாக விரைவில் ஒருநாள் போட்டி அணியிலும் ரிஷப் பண்டிற்கு பதிலாக சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *