இந்தியாவிலிருந்து வங்கதேச தூதர் திடீர் திரும்பப் பெறப்பட்டதன் பின்னணி என்ன பதற்றத்திற்கு மத்தியில் யூனுஸ் அரசு எடுத்த அதிரடி முடிவு

இந்தியாவிலிருந்து வங்கதேச தூதர் திடீர் திரும்பப் பெறப்பட்டதன் பின்னணி என்ன பதற்றத்திற்கு மத்தியில் யூனுஸ் அரசு எடுத்த அதிரடி முடிவு

வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் அமைதியற்ற சூழல் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களால் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்தியாவில் உள்ள வங்கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்லாவை உடனடியாக டாக்காவுக்கு வருமாறு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கவே அவர் திங்கள்கிழமை இரவு டாக்கா சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஷேக் ஹசீனா பதவி விலகலுக்குப் பிறகு அமைக்கப்பட்ட முகமது யூனுஸின் இடைக்கால அரசால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மற்றும் இந்திய துணைத் தூதரகம் மீதான வன்முறை முயற்சிகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக விசா சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தூதர் திடீரென திரும்பப் பெறப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *